சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரும் முடிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கக் கோரி அரசினர் தனித் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.இதுபற்றி பேசிய ரகுபதி, "சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர 2006லேயே தீர்மானம் கொண்டு வந்தோம். இதுவரை இரண்டு முறை பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் அடங்கிய தரவுகள் இருந்தால் அதனை அங்கீகரிக்கிறோம் என்று சொன்னார்கள். எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவரும் முடிவு தடுக்கப்பட்டதே தவிர மறுக்கப்படவில்லை. இதற்காக பிள்ளையார் சுழி போட்டது முன்னாள் முதல்வர் கருணாநிதி. மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுதொடர்பாக நேரடியாக கோரிக்கை வைத்தார். 2022 சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் நேரடியாக இதுபற்றி பேசினார் ஸ்டாலின். முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் வரிகளையே தற்போதைய முதல்வர் மீண்டும் முன்மொழிந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் முன்வைத்தவர் ஸ்டாலின்தான். இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதற்கு முன்னதாக வரலாறு முக்கியம், வரலாறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது. 2006 முதல் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்.எங்களுடைய குழந்தையை நாங்கள் வரவேற்பதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய தாய்மொழி எங்கும் ஒலிக்க வேண்டும். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கனவு. ஏனெனில் சட்டம் படித்தவர்கள்தான் நீதிமன்ற வழக்குகளை புரிந்துகொள்ள முடியும். இந்த முயற்சியாவது வெற்றி பெறட்டும். சட்டத்தில் உள்ள சொற்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால்தான் அனுமதி கிடைக்கும். ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மாநிலங்களில் அனைத்தும் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாங்கள் எடுத்த முயற்சியை நீங்களும் எடுத்திருக்கிறீர்கள். அதனை வரவேற்கிறோம்" என்றார். we welcome the resolution; let this effort at least succeed: Raghupathiசென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!