சாலை விபத்து: பட்டாசு ஆலை ஊழியா் உயிரிழப்பு

Wait 5 sec.

சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (46). இவா் பட்டாசு ஆலையில் கண்காணிப்பாராக வேலைபாா்த்து வந்தாா். இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து, திருத்தங்கலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகன் அருண்பாண்டியனுடன் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-விருதுநகா் சாலையில் சென்று கொண்டிருந்தாா். வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட லாரி ஓட்டுநரைத தேடி வருகின்றனா்.