வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு செப்டம்பா் 8-ஆம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உலக பிரசித்திப் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டுச் செல்லும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த பேராலயத்தில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்கிய நிலையில், ஆண்டுப் பெருவிழா செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாகை மாவட்டத்துக்கு செப்டம்பர் 8-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார்.செப்டம்பா் 8-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதை ஈடு செய்யும் வகையில் செப்டம்பா் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்