மகளின் பேச்சால் பதவி பறிப்பு? தெலங்கானா அமைச்சரவையில் இருந்து கொண்டா சுரேகா நீக்கம்!

Wait 5 sec.

தெலங்கானா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் கொண்டா சுரேகா நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கொண்டா சுரேகா உடனடி நடவடிக்கையாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக, வியாழக்கிழமை (செப். 3) அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடனான ஆலோசனைகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், அமைச்சர் சுரேகாவை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி தெலங்கானா ஆளுநருக்கு முறைப்படி பரிந்துரைத்துள்ள நிலையில், தில்லி சென்றுள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று மாலை ஹைதராபாத் வருவதற்குள் சுரேகாவின் பதவி நீக்கம் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, அமைச்சர் சுரேகாவின் மகளும் காங்கிரஸ் உறுப்பினருமான சுஷ்மிதா கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில் முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அவரின் சகோதரர் ஜி சின்னா ரெட்டி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, 18 அமைச்சர்களில் வெறும் 2 பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த தெலங்கானா அமைச்சரவையில் இருந்து கொண்டா சுரேகா நீக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, சுஷ்மிதா கடந்த 2025 ஆம் ஆண்டு முதல்வர் ரேவந்த் ரெட்டி குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இம்முறை அவரது தாயாரும் அமைச்சருமான சுரேகாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஜல் வாரிய ஊழல் வழக்கு: சத்யேந்தர் ஜெயினுக்கு நீதிமன்றம் ஜாமீன்!Minister Konda Surekha has been removed from the Telangana Cabinet.