பொன்னேரி: மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் 5 கிமீ தூரத்துக்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூரை சுற்றியிருக்கும் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. காட்டுப்பள்ளி பகுதியில் அதானி தனியார் துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு முனையம், நிலக்கரி கிடங்கு என பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகங்கள் மற்றும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு வந்து செல்கின்றன.அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களுக்கு சரக்கு கப்பல்கள் வந்துள்ளதால் சரக்குகளை ஏற்ற செல்லும் கனரக வாகனங்கள் கையாள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.அணிவகுத்து நிற்க்கும் கனரக வாகனங்கள். இதன் காரணமாக, மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.அதே போன்று பொன்னேரி - திருவொற்றியூர் சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் வண்டலூர்-மீஞ்சூர், பொன்னேரி- திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.Heavy vehicles are lined up for a distance of 5 km on the Minjur-Vandalur Outer Ring Road.அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!