இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Wait 5 sec.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் செப்டம்பர் 15 ஆம் தேதியும், ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதியும் தொடங்குகிறது.இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 2) அறிவித்துள்ளது.டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்களிலுமே குசல் மெண்டிஸ் அணியைக் கேப்டனாக வழிநடத்துகிறார். சரித் அசலங்கா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, சரித் அசலங்கா டி20 போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், அவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கு துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் 11போட்டிகளில் 385 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், அவர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்குசல் மெண்டிஸ் (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் சலங்கா, ஜனித் லியாநாகே, பவன் ரத்நாயகே, தாசுன் ஷானகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்‌ஷனா, சச்சிந்து கொலம்பேஜ், துஷ்மந்தா சமீரா, எஷான் மலிங்கா, அசிதா ஃபெர்னாண்டோ, தில்ஷன் மதுஷங்கா.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி விவரம்குசல் மெண்டிஸ் (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷாரா, லகிரு குமாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா, ஜனித் லியாநாகே, தாசுன் ஷானகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, தரிந்து ரத்நாயகே, துஷ்மந்தா சமீரா, எஷான் மலிங்கா, நுவான் துஷாரா, பினுரா ஃபெர்னாண்டோ.The country's cricket board announced the Sri Lanka squad today for the T20 and ODI series against England.துலீப் டிராபி: 2-வது இன்னிங்ஸிலும் திலக் வர்மா அசத்தல்; இறுதிப்போட்டியில் சௌத் ஸோன் அணி!