ஈரான் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பலைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானின் பல்வேறு மாகாணங்களின் மீது புதன்கிழமை (செப். 2) அதிகாலை வரை அமெரிக்க படைகள் தாக்குதல்கள் நடத்தின. இதில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் உள்ள ஹோர்மோசன் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற ஒரு வீட்டின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் இந்தப் புதிய தாக்குதலில், கோஹெஸ்தாக்கில் 4 பேரும், குஸிஸ்தான் மாகாணத்தில் 7 பேரும், கெர்மன்ஷாவில் ஈரானின் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த 4 வீரர்களும், லாவன் தீவில் பசிஜ் பிரிவு வீரர்கள் 3 பேரும், ஃபார்ஸ் மாகாணத்தில் ஒருவரும் என மொத்தம் 19 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டது என அமெரிக்க அரசு விளக்கமளித்துள்ளது. ஆனால், அமெரிக்கா செய்திருப்பது போர்க்குற்றம் எனவும், இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு எதிராகப் போர் தொடங்கிய அமெரிக்கா தற்போது ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! It has been reported that the death toll from the new US attack on Iran has risen to 19.