லீ க்ரோனின்ஸ் த மம்மி ஓடிடி ரிலீஸ் தேதி!

Wait 5 sec.

இயக்குநர் லீ க்ரோன் இயக்கிய ’லீ க்ரோனின்ஸ் த மம்மி’ என்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு மொழிகளில் வெளியாகுமென்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் பார்வையிடலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலைவனத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன குழந்தை, மீண்டும் மம்மியாக தனது குடும்பத்திடம் திரும்புவது போன்று கதை நகர்கிறது.ஈவில் டெட் ரைஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் லீ க்ரோன், த மம்மி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பட்ஜெட்டை விட நான்கு மடங்கு அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வரும் செப்.17ஆம் தேதி வெளியாகிறது. இதனை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரசிகர்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.The dead don't always rest in peace.#LeeCroninsTheMummy streaming 17th September onwards on #HBOMaxOnJioHotstarAvailable in English, Hindi, Tamil & Telugu. pic.twitter.com/If6CD4UyiO— JioHotstar (@JioHotstar) September 2, 2026தவறானவரைத் திருமணம் செய்துவிட்டேன்: பிரதீப் ஆண்டனிLee Cronin's 'The Mummy' OTT release date!