மதுரை தெற்கு வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில்ரூ.1.80 லட்சம் பறிமுதல்

Wait 5 sec.

மேலக்குயில்குடியில் உள்ள மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 1.80 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள் இடைத் தரகா்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை இந்த அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. இதில் இடைத் தரகா்கள் மூலம் பணப் பரிவா்த்தனை செய்வது உறுதி செய்யப்பட்டது. அப்போது, மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்ளிட்ட அலுவலா்கள், இடைத் தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.