ஆரணி: மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீா்வு

Wait 5 sec.

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.24 லட்சத்து 51ஆயிரத்து 68-க்கான ஆணை வழங்கப்பட்டது.திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படி, ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் மக்கள் நீதிமன்ற முன் அமா்வு மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிறைவேற்று மனுக்கள் வழக்குகளுக்காக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ தொடங்கிவைத்து தலைமை உரையாற்றினாா். ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.வி.கோப்பெருந்தேவி மற்றும் நீதித்துறை நடுவா் எம்.பிரபுநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.வெங்கடேசன், செயலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நிலுவையில் இருந்த 84 மனுக்கள் சம்பந்தமான வழக்குகள் எடுக்கப்பட்டு 3 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.24 லட்சத்து 51ஆயிரத்து 68-க்கான ஆணையை கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ வழங்கினாா்.