ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.டிசிலோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் டிசி.இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை(செப். 4) வெளியாகிறது.ஜிடிஎன்புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க, இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.இந்தப் படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.உன்மத்தம்கிரண் தாஸ் இயக்கத்தில், குஞ்சாக்கோ போபன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உன்மத்தம்.இந்தத் திரைப்படம் நாளை சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.அனந்தன் காடு அனந்தன் காடு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.நடிகர் ஆர்யாவுடன் முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன், சுனில், ரெஜினா, தேவ் மோகன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.கொரியன் கனகராஜுவருண் தேஜ் நடிப்பில் வெளியான புதிய திரைப்படம் கொரியன் கனகராஜு. இந்தப் படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார்.இந்தத் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.தி கோர்ட்நடிகை யோகலட்சுமி, தி கோர்ட் என்ற இணையத் தொடரில் பிரதான பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரில் ஜெயபிரகாஷ், சஞ்சனா திவாரி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.இந்த இணையத் தொடர் நாளை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.ஜகமே சங்கீதம் பாலநாத் சூர்ய பிரதாப் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள ஜகமே சங்கீதம் இணையத் தொடரை சுஷ்மிதா கொனிடேலா தயாரித்துள்ளார்.இந்தத் தொடர் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.கடந்த வார ஓடிடி (அன்பே டயானா)மில்லியன் டாலர் பிக்சர்ஸ் மற்றும் இரா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த திரைப்படம் அன்பே டயானா.இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.பபிதா சிங் ரிப்போர்ட்டிங்நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பபிதா சிங் ரிப்போர்ட்டிங்.அம்பிகா பண்டிட் இயக்கியுள்ள இந்தப் படத்தை, அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.சும்பக்அதிஷ் கபாடியா இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சும்பக். இந்தப் படத்தில் இதில் நீனா குப்தா, தேவன் போஜானி, அர்ஜுன் பிஜ்லானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.பந்தர்அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பாபி தியோல், சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளியான திரைப்படம் பந்தர்.இந்தத் திரைப்படம் ஜீ5 தளத்தில் காணக் கிடைக்கிறதுலர்க்நிஷாத் இயக்கத்தில் சைஜு க்ருப், அனுமோல், அஜு வர்கீஸ், பிரகாஷ் அலெக்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லர்க்.சர்வைவல் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.ஐ, நோபடிநடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கீம் ஷாஜகான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ, நோபடி.இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் காணக் கிடைக்கிறது.Let’s take a look at which movies and web series are set to release on OTT platforms this week.ஓடிடியில் பார்க்க வேண்டிய ரொமான்டிக் படங்கள்!