பாலியல் வழக்குகளை முடித்து வைக்க பஞ்சாப் முதல்வரும் அவரது மனைவியும் இடைத்தரகர்கள் மூலம் ஊழல் வலையமைப்பை நடத்தி ரூ. 5 கோடி வரை பேரம் பேசுவதாக பாஜக குற்றச்சாட்டு வைத்துள்ளது. பாலியல் வழக்கு ஒன்றை முடித்து வைக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங்கின் மனைவி குர்ப்ரீத் கவுர் ரூ. 5 கோடி லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. பஞ்சாப் முதன்மைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த ஆகஸ்ட் 21 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது.இந்த விவகாரம் பற்றி இன்று செய்தியாளர்களுடன் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பந்தாரி, இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்ட ஆடியோ பதிவு ஒன்றை ஒலிபரப்பி அதில் பஞ்சாப் முதல்வர், அவரது மனைவி மற்றும் கேஜரிவால் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாகத் தெரிவித்தார்.முதல்வர் மற்றும் அவரது மனைவியின் கீழ் பஞ்சாப் முழுவதும் பாலியல் வன்கொடுமை வழக்குகளைத் தீர்த்துவைக்கவும், பேரம் பேசவும் இடைத்தரகர்கள் செயல்பட்டு வருவதாக பிரதீப் பந்தாரி குற்றம்சாட்டினார். இடைத்தரகர்கள் மூலம் ரூ. 5 கோடி வரை லஞ்சம் வாங்க பேரம் பேசப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், முதல்வர் அலுவலகம் ஊழல் சிண்டிகேட்டாக மாறிவிட்டதாகத் தெரிவித்தார்.மேலும், விசாரணை நடைபெற்று வரும் பாலியல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் உறவினரிடம் பேசிய இடைத்தரகர், முதல்வரிடம் தகவலைத் தெரிவித்து விட்டதாகக் கூறியுள்ளார். இதனைச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த பிரதீப், குறிப்பிட்ட ஆடியோவை இவ்வழக்கில் பாஜக சார்பில் ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.அதேபோல, பஞ்சாபின் சூப்பர் முதல்வர் எனக் குறிப்பிடப்படும் கேஜரிவாலுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.BJP has alleged that the Punjab Chief Minister and his wife are negotiating deals worth up to ₹5 crore through middlemen to settle sexual harassment cases.பள்ளி விடுதியில் பேயா? இரவு முழுவதும் மாணவர்களுடன் தங்கிய மாவட்ட ஆட்சியர்!