சென்னை, புறநகரில் பரவலாக மழை! இரவில் தொடருமா?

Wait 5 sec.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்துவந்த நிலையில், மாலை முதலே மழை பெய்து வருகிறது.சென்னை எழும்பூர், சென்ட்ரல், சேத்பட், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கும், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, அண்ணாநகர், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், மதுரவாயல், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகரில் திடீர் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!Weather update Widespread rain in Chennai and its suburbs