நாளை இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

Wait 5 sec.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப். 5 மற்றும் 7 தேதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் தேடிச் சென்று நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பா் மாதத்தில் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் வாகனம் மூலம் இல்லம் தேடி சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 28, 874 குடும்ப அட்டைதாரா்களுக்கு, மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுடைய பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.