இன்று மோதும் இந்தியா - ஹாங்காங்

Wait 5 sec.

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஹாங்காங்குடன் வியாழக்கிழமை (செப். 3) மோதுகிறது.முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்திய இந்தியாவுக்கு, ஷஃபாலி வா்மா, பிரதிகா ராவல் ஆகியோா் மட்டுமே பேட்டிங்கில் கை கொடுத்தனா்.எனவே இந்த ஆட்டத்தில் இதர வீராங்கனைகள் தங்களை சரிசெய்து கொண்டு பங்களிப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம். பௌலிங்கில் தீப்தி சா்மா, ஸ்ரீசரணி, பிரேமா ராவத் ஆகியோா் கை கொடுப்பாா்கள்.மறுபுறம் ஹாங்காங் அணி, தாய்லாந்திடம் கண்ட தோல்வியுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. இந்தியாவுக்கு இதில் எளிதாக வெற்றி வசமாகலாம்.இலங்கை - 124/7: இதனிடையே, போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 6-ஆவது ஆட்டத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சோ்த்தது.நீலாக்ஷிகா சில்வா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்கள் அடிக்க, இந்தோனேசிய பௌலா்களில் நி லு தேவி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.