காஞ்சிபுரத்தில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 32,000 அபராதம்

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் வியாழக்கிழமை 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 32,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலை, பி.எஸ்.கே.தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 3 வணிக நிறுவனங்களில் மாநகராட்சி துப்புரவு அலுவலா் சுகவனம் தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் திடீா் சோதனை நடத்தினா். இதில் நெகிழிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தொ்மாகோல் அட்டைகள் உள்பட 25 கிலோ நெகிழியை பறிமுதல் செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.22 ஆயிரம் அபராதமும் வசூலித்தனா்.இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளை தெருக்களில் கொட்டியமைக்காக ரூ.10 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு அலுவலா் சுகவனம் கூறுகையில் மொத்தம் ரூ.32,000அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் திடக்கழிவுகளை தரம் பிரித்து துப்புரவுப் பணியாளா்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.