ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு ரயில் நவம்பா் வரை நீட்டிப்பு

Wait 5 sec.

ஹூப்ளி-ராமேசுவரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில்கள் வரும் நவம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ஹூப்ளி- ராமேசுவரம் இடையேயான வாரந்திர சிறப்பு ரயில் (எண்: 07355) வரும் அக்.4, 11, 18, 25, நவ.1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும். அதன்படி, ஹூப்ளியில் காலை 6.50 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.மறுமாா்க்கத்தில் ராமேசுவரம்-ஹூப்ளி இடையேயான விரைவு ரயில் (எண்: 07356) வரும் அக்.5, 12, 19, 26 மற்றும் நவ.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நீட்டித்து இயக்கப்படும். அந்த ரயில் ராமேசுவரத்தில் இருந்து அந்தத் தேதிகளில் இரவு 8 மணிக்குப் புறப்பட்டு ஹூப்ளிக்குச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.