ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் பி.வெங்கட ரமணன் மற்றும் வ.காந்திராஜ் ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.தென்மேற்கு பருவமழை குறைவாக உள்ள நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக ஆயிரம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு சார்பாக மகாராஷ்டிரத்தின் நாசிக் வெங்காய குடோனில் இருந்து பல மாநிலங்களுக்கு வெங்காயத்தை டன் கணக்கில் அனுப்பி வருகிறது. இதன் மூலம் வெங்காயத்தை விலையை குறைத்து ஒரு கிலோ ரூ. 35-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக நகர்ப்புறத்தில் அமைந்துள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வெங்காயம் வழங்கப்படவுள்ளது.சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள (டி.யு.சி.எஸ். லிட்.) திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் வியாழக்கிழமை வெங்காய விற்பனை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கட ரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.Ministers P. Venkata Ramanan and V. Gandhiraj inaugurated the scheme to sell onions at ration shops on Thursday.