தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3) சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. போர் பதற்றம், உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலர் மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றைப் பொறுத்து தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது.இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ. 1,080 குறைந்தது. செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது. நேற்று (புதன்கிழமை) சவரனுக்கு ரூ. 1,800 குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 3, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 2,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,920 -க்கும் கிராமுக்கு ரூ. 290 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,240 -க்கும் விற்பனையாகிறது.இன்றைய வெள்ளி விலை நிலவரம்இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. கிராம் ரூ. 250 -க்கும் கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,50,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.Today's gold and silver rate in Chennai, TamilNadu