அரசன் படத்தின் வெளியீடு பற்றி நடிகர் சிலம்பரசன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் அரசன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், அனிருத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் அறிவிப்பு விடியோ வெளியானது முதலே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், வடசென்னை பட உலகில் இப்படத்தின் கதையும் நிகழ்வதால் படவெளியீட்டிற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அரசன் படத்துடன் கென் கருணாஸ் நடிப்பில் ’ராஜன் வகையறா’ படத்தின் படப்பிடிப்பையும் வெற்றிமாறன் ஒரே நேரத்தில் நடத்தி வருவதால் அரசன் படப்பிடிப்பு அவ்வப்போது இடைவேளை விட்டு எடுக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக அரசன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதங்களால் பொங்கலன்று வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், படம் பற்றிய புதிய அப்டேட் ஒன்றை நடிகர் சிம்பு ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பேசுகையில் அறிவித்தார்.அதில், “நான் வெற்றிமாறன் சாரிடம் வற்புறுத்திக் கேட்டேன். படம் எடுக்க நீங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். லேட்டாக தான் படம் வரப்போகிறது. பொங்கலுக்கும் படம் வெளியாகாது என சொல்லிவிட்டீர்கள். என்னுடைய ரசிகர்களை என்னால் காக்க வைக்க முடியாது. ரொம்ப நாளாக காத்திருக்கிறார்கள். அதனால், படப்பிடிப்புக்கு முன்னதாக திரையரங்குகளில் ஒரு ப்ரோமோ வெளியிட்டதைப் போன்று, இதுவரை நடத்திய படப்பிடிப்பை ‘வேர்ல்ட் ஆஃப் அரசன்’ (World of Arasan) என்ற பெயரில் ஒரு பிரத்யேகமான ப்ரோமோவாக தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிடவுள்ளோம். அனைவரும் தீபாவளிக்கு திரையரங்கிற்கு வந்து பாருங்கள்” என்றார். தீபாவளிக்கு அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியாவதாக சிம்பு அறிவித்த நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.Silambarasan has given a new update about the release of the film Arasanடோரதி படத்தின் பின்னணி இசை வெளியீட்டு விழா: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு!