மதுரா: உத்தரப் பிரதேசத்தில் 2027-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 'பெரும் பெரும்பான்மையுடன்' மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.மதுராவில் நடைபெற்ற 'பஞ்சாயத்து ஆஜ் தக்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், நம்பிக்கை எவ்வாறு பொருளாதார செழிப்பாக மாறுகிறது என்பதைக் காட்டும் 'பிரகாசமான உத்தரப் பிரதேசத்தை' முன்னிறுத்தி, 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் "இரட்டை என்ஜின்" அரசு சிறப்பான வெற்றியைப் பெறும் என்று கூறினார். தனது அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தலித் என பயனாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் 2027-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து பாஜவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், பாஜக 'பெரும் பெரும்பான்மையுடன்' வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.2022 தேர்தலுக்கு முன்பும் இதேபோன்ற கணிப்பை வெளியிட்டிருந்ததாக கூறிய யோகி ஆதித்யநாத், அரசுத் திட்டங்களால் பயனடைந்தவர்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தின் வளமான மத மற்றும் கலாசார பாரம்பரியம் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் கூறிய அவர், இதற்கு உதாரணமாக 'ப்ராஜ்' பிராந்தியத்தைக் குறிப்பிட்டார்.2025-ல் உத்தரப் பிரதேசத்திற்கு மட்டும் 156 கோடி பக்தர்கள் வருகை தந்தனர் என்றும், ப்ராஜ் பிராந்தியத்திற்கு மட்டும் 11 கோடி பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்தனர் என்று அவர் கூறினார்.இவ்வளவு அதிகமான வருகை, நம்பிக்கையையும் பொருளாதாரத்தையும் இணைப்பதில் நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு புதிய அனுபவத்தை அளித்துள்ளது. இந்த மாற்றம், அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும் என்று ஆதித்யநாத் தெரிவித்தார். சவால்களைக் கண்டு பின்வாங்காமல், அந்தச் சவால்களுக்குள் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்வுகளை நோக்கி முன்னெடுத்துச் செல்பவர்களே வெற்றியின் புதிய அளவுகோல்களை உருவாக்குகிறார்கள் என்று அவர் கூறினார்.உத்தரப் பிரதேசம் இப்போது முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், அரசின் கொள்கைகளைப் பின்பற்றும் முதலீட்டாளர்கள் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் யோகி கூறினார்.எங்களிடம் முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான வசதிகள் உள்ளன. இப்போது அனைத்தும் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன. தனது அரசு 9.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாக ஆதித்யநாத் கூறினார்.Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that the BJP's "double-engine" government will secure a comfortable victory in the 2027 pollsஇந்தியாவிடம் எந்தவித இழப்பீடும் கோரவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் விளக்கம்