செப். 9-ல் ஆலோசனைக் கூட்டம்: கூட்டணிக் கட்சிகளை நேரில் அழைத்த அமைச்சர்கள்

Wait 5 sec.

தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோருக்கு தவெக நிர்வாகிகளான அமைச்சர்கள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்த கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம், செப். 9-ல் நடைபெறவுள்ளது. மேலும், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.ஏற்கெனவே, சென்னை கோவளத்தில் ஜூலை 1-ல் நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் பங்கேற்றபோதிலும், இடதுசாரிகள் கட்சிகள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.9 சவரன் நகைகளைத் திருடி காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைதுConsultative meeting of TVK alliance parties on September 9