மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் புதிய அப்டேட்!

Wait 5 sec.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு தேதி வெளியிடப்பட்டுள்ளது. தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணி ரத்னம், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது.லைக்கா புரோடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகள் இடையே உருவாகும் இந்தப் படத்துக்கு இசையமைப்பளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த நிலையில், இந்தப் புதிய படத்தின் பெயர் வரும் செப். 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு இன்று (செப். 4) சிறப்பு விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும், ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவான “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்மன்! இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு! The date for the announcement of the title of the film directed by Mani Ratnam and starring Vijay Sethupathi and Sai Pallavi has been revealed.