ஹிமாசலில் தொடர் மழை: 87 சாலைகள் மூடல்

Wait 5 sec.

ஹிமாசலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மொத்தம் 87 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, மூடப்பட்டுள்ள 87 சாலைகளில் அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 37, அதைத் தொடர்ந்து குலுவில் 22, காங்ராவில் 8, சம்பாவில் 5, சிர்மார் மற்றும் உனாவில் தலா 4, சிம்லாவில் 3, சோலனில் 2 மற்றும் லாஹூல்-ஸ்பிதி மற்றும் பிலாஸ்பூரில் தலா 1 சாலையும் முடங்கியுள்ளன.இதுதவிர, 27 மின் மாற்றிகள் மற்றும் 19 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை மாலை முதல் சிர்மார் மாவட்டத்தில் உள்ள நஹான் பகுதியில் 67.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல், ஜோகிந்தர்நகர் 57 மி.மீ, நடான் 52.6 மி.மீ, ஜட்டன் பாரேஜ் மற்றும் பர்வாய்ன் தலா 40 மி.மீ, தர்மசாலா 34.4 மி.மீ, நைனா தேவி 34.2 மி.மீ, கடௌலா 26.1 மி.மீ மற்றும் நேரி 20 மி.மீ ஆகிய இடங்களில் மழை பதிவாகியுள்ளது. காங்ரா மற்றும் சுந்தர்நகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், காங்ரா மற்றும் சிர்மார் மாவட்டங்களின் சில பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என சிம்லா வானிலை மையம் எச்சரித்து மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் கணித்துள்ளது.ஜூன் 30-ஆம் தேதி பருவமழை தொடங்கியது முதல் இதுவரை மழை தொடர்பான விபத்துகளில் மாநிலம் முழுவதும் 108 பேர் பலியாகியுள்ளனர் என்றும் மாநிலத்திற்கு ரூ. 1,237 கோடி மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். A total of 87 roads were closed in Himachal Pradesh following rainfall, even as the Shimla MeT Office on Friday issued a yellow alert, warning of further heavy rains in isolated areas of Kangra and Sirmaur districts on Saturday.இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம்