உதய் செளஹான் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள பல்லபுருசு திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இந்தப் படத்தில் சுதாகர் ரெட்டி, முரளிதர் கெளட், பிரஜ்வல் யத்மா, கோமதி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பவன் சிஎச் இசையமைத்துள்ளார்.அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் மற்றும் எபிக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஒளிப்பதிவை வினோத் கே பங்காரி மேற்கொண்டுள்ளார்.மகளின் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் மகன் பிரஷ்(tooth brush) வாங்கித் தராததால், கோபமடையும் 70 வயது தந்தை, தன் சொந்த மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். இதுவே இந்தப் படத்தின் கதை. குடும்ப உறவுகள், முதியவர்களின் தனிமை மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், பல்லபுருசு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கிறது.Directed by Uday Chauhan, the comedy film Pallapurusu has been released on an OTT platform and is attracting the attention of audiences.ஓடிடியில் வெளியாகும் திருப்பங்கள் நிறைந்த காதல் திரைப்படம்!