அருணாச்சலில் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகள் மீட்பு: நபர் கைது!

Wait 5 sec.

அருணாச்சலில் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகளை மீட்ட போலீஸார், ஒருவரைக் கைது செய்துள்ளனர். அருணாச்சலபிரதேச மாநிலம், நஹர்லகன் பகுதியில் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு உருளைகள் திருடு வோவதாக போலீஸுக்கு புகார் வந்திருக்கிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். திருட்டு நடந்த விதத்தை ஆய்வு செய்த போலீஸ் குழுவினர், உள்ளூர் ஐஜி பார்க் காலனியைச் சேர்ந்த 30 வயதான அர்ஜுன் ஜுகா குற்றவாளி என்பதைக் கண்டறிந்தனர். இவ்வழக்கில் ஜுகா வியாழக்கிழமை ஜூலி சாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் கூறினார். நஹர்லகன் காவல் ஆய்வாளர் கிருஷ்ணேந்து தேவ் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.இதுகுறித்து நஹர்லகன் காவல் கண்காணிப்பாளர் நியேலம் நேகா தெரிவித்திருப்பதாவது, கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் திருடப்பட்ட 23 சமையல் எரிவாயு உருளைகளும் மீட்கப்பட்டன. வழக்கமான குற்றவாளிகள் பெரும்பாலும் பூட்டப்பட்ட மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளைக் குறிவைத்தே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் தங்கள் சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார். Police in Arunachal Pradesh's Naharlagun have arrested a person and recovered 23 stolen LPG cylinders, officials said on Friday.ஜம்மு-காஷ்மீர்: வனப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை!