டிரம்ப்பின் விருப்பமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி!

Wait 5 sec.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிதான் முதலாவதாக இருப்பார் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் நட்பு குறித்து தனியார் தொலைக்காட்சியில் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பேசியதாவது, "டிரம்ப்பை சந்திக்க 35 தலைவர்கள் வருவதாக டிரம்ப்பிடம் கூறி, யாரை அவர் முதலில் பார்க்க விரும்புவதாகக் கேட்டுப் பாருங்கள். அந்தப் பட்டியலில் பிரதமர் மோடிதான் முதலிடத்தில் இருப்பார்.டிரம்ப்பிடம் பேசும்போதெல்லாம், அவர் இந்தியாவில் மேற்கொண்ட பயணத்தையும், அவரின் அன்பான நண்பர் பிரதமர் மோடியையும்தான் அவர் நினைவுகூர்கிறார். காத்திருங்கள். என்னால் அவ்வளவுதான் சொல்ல முடியும். அதற்குள் அடுத்தாண்டு வந்துவிடும் என்று கூறினார்.இதன் மூலம், அடுத்தாண்டில் இந்தியாவுக்கு டிரம்ப் வருகைதர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் துரதிருஷ்டவசமான தீர்ப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட்டு, இறுதி நிலையை நெருங்கி விட்டோம்.இத்தகைய பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் நேரம் எடுக்கும். இது ஓராண்டு ஆகிவிட்டதாக என்னிடம் கேட்கின்றனர். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் அது முடியடையவில்லை.இரு நாடுகளுக்கிடையேயான உறவு வர்த்தகத்தைப் பற்றியது மட்டுமல்ல. அது நம்பிக்கை பற்றியதும்கூட. அமெரிக்கா, உலக நாடுகள் அனைத்துக்கும் ராணுவ உபகரணங்களை வழங்குவது கிடையாது. அதன் நம்பிக்கைக்குரிய நாடுகளுக்கு மட்டுமே வழங்கும். அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.மெலோடி! இத்தாலியின் நீண்ட கால பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்துPrime Minister Modi tops US President Trump's list of favorites