நடிகர் சூர்யாவின் அடுத்தப் படத்தை மண்டாடி படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள மண்டாடி திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாகை பகுதி மீனவர்களின் வாழ்வியலையும் அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் செப். 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதற்கு அடுத்ததாக இயக்குநர் மதிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து படத்தை இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கருப்பு, விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படங்களின் தொடர் வெற்றியைத் தொடர்ந்து, ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் படத்தில் இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருந்த வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவிருந்தார்.பல்வேறு காரணங்களால் இப்படம் தள்ளிப்போன நிலையில், சூர்யா அந்தப் படத்திற்குக் கொடுத்த தேதிகளைப் பயன்படுத்தி மதிமாறன் இயக்கும் படத்தில் அவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர் தாணு முயற்சித்து வருகிறார்.மதிமாறன் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரே மதிமாறனை பரிந்துரைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.Reports suggest that Mandadi director Mathimaran Pugazhenthi will direct actor Suriya's next film.தீபாவளி அன்று திரைகளில்... அரசன் படத்தின் புதிய அப்டேட் சொன்ன சிம்பு!