மகாராஷ்டிரத்தில், பழங்குடியின மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார். மகாராஷ்டிரத்தில், பழங்குடியின மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புகள் மற்றும் முறைக்கேடுகளைக் கண்டித்து நாசிக் மாவட்டத்தில் கடந்த 12 நாள்களாகப் பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று, மகாராஷ்டிர பழங்குடியின வளர்ச்சித் துறை அமைச்சர் அசோக் வூயிகே உள்ளிட்ட அதிகாரிகள் பதவி விலக வேண்டுமெனவும், விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டுமெனவும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், நாசிக்கில் நடைபெறும் பழங்குடியின மாணவர் போராட்டத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (செப். 3) நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கல்விக்கென்று பாதுகாப்பான சூழலைப் பெறும் உரிமை ஒவ்வொரு மாணவருக்கும் உண்டு. விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி அமைப்பின் புறக்கணிப்புக்கு ஆளாகக் கூடாது. அவர்களுக்கு அதன் உதவியும், ஆதரவும் கிடைக்க வேண்டும். கல்வி என்பது சலுகை அல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உரிமையாகும்” எனக் கூறப்பட்டுள்ளது.முன்னதாக, நாசிக் மாணவர் போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜீத் தீப்கே நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!In Maharashtra, Rahul Gandhi, the LOP in the Lok Sabha, visited the site of the hunger strike by tribal students to extend his support.