நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. விடுதலை, கருடன், மாமன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள புதிய படம் “மண்டாடி”. இப்படத்தை, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.நாகையைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள “மண்டாடி” படத்தின் புதுமையான கதைகளம் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள “மண்டாடி” படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (செப். 4) வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகர்கள் சத்யராஜ், மஹிமா நம்பியார், சுஹாஸ், மிதூன் ஜெய்சங்கர் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்துடன், வரும் செப். 10 ஆம் தேதி “மண்டாடி” படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இந்தப் படம் ஐமேஸ் தரத்திலும் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.அஜித்குமாரின் கிளாடியேட்டர்ஸ் டிரைலர் தேதி அறிவிப்பு!The trailer for the movie "Mandadi," starring actor Soori as the lead, has been released.