தனியாக ஆற்றைச் சுத்தம் செய்த மாணவருக்கு பன்னாட்டு அங்கீகாரம் தேவை: பீட்டர்சன்

Wait 5 sec.

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “தனியாக ஆற்றைச் சுத்தம் செய்த மாணவருக்கு பன்னாட்டு அங்கீகாரம் தேவை” எனக் கூறியுள்ளார்.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு சிங் என்ற 20 வயது பிஎஸ்சி படிக்கும் மாணவன் தனியாளாக ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியாரோவில் கோயிலுக்கு அருகில் இருக்கும் அஜ்னர் ஆற்றைச் சுத்தம் செய்துள்ளார். இந்த மாணவனுக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய மாணவனின் இந்தச் செயலுக்கு இந்திய அளவில் பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.எப்போதுமே இந்தியா குறித்தும் இந்தியர்கள் குறித்தும் நல்லதாகவே பதிவிடும் பீட்டர்சன் இந்த மாணவன் செய்த செயல் குறித்தும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: நான் இந்தச் செய்தியைப் படித்தேன். இதனை உங்களுக்குப் பகிர வேண்டுமென நினைக்கிறேன். சிறப்பாக செய்துள்ளாய் தம்பி! 20 வயதான பிட்டு டபாஹி, மாசடைந்த ஆற்றை தனியாளாகவே நீந்தி கையுறைகள் இல்லாமலும் சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிஎஸ்சி மாணவர் பியாரோவில் கோயிலுக்கு அருகில் இருக்கும் அஜ்னர் ஆற்றைச் சுத்தம் செய்ய கடந்த ஜனவரி 26, 2026 முதல் தொடங்கியுள்ளார். பிளாஸ்டிக் பொருள்களால் இந்த ஆறு குப்பைக் கிடங்குபோல இருந்திருக்கிறது. தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தைச் சேர்த்து பூஜையில் ஏற்படும் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகளை வாங்கியுள்ளார். இதற்காக அவருக்கு சுமார் ரூ.30,000 செலவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆற்றைச் சுத்தம்செய்யும்போது அவரது கைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவரது அற்பணிப்புக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு கிடைத்துள்ளது. சிலர் இவரை லைக் வாங்க செய்திருப்பார் என விமர்சிக்கிறார்கள். பிட்டுவின் உபப் பெயர் டபாஹி அதாவது அழிவு என்று பொருள். இன்று அவர் நீர் மாசுவை அழித்துள்ளார். சில நேரங்களில் மாற்றம் என்பது அடுத்தவர்களுக்காக காத்திராமல் நாமே தொடங்குவதுதான். இது நிச்சயமாக நாயகன் செய்யக்கூடியதே! இந்தச் செயலுக்கு பன்னாட்டு அங்கீகாரம் தேவை! எனக் கூறியுள்ளார். View this post on Instagram Bittu Tabahi Student who cleaned the river single-handedly deserves international recognition: Peterson