குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதா ருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வெள்ளிக்கிழமை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காலை 8.30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 10.30 மணிக்கு புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், வழக்குரைஞா்கள் கே.மோகன், கே.எம்.பூபதி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணியளவில் சுவாமிகளுக்கு வெண்ணை ஊட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.