தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) தொடங்குகிறது. தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்னரே தொடங்கும். அதன்படி, வரும் நவ.8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளநிலையில், நவ.5-ஆம் தேதி ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.6) காலை 8 மணி முதல் தொடங்குகிறது. நவ.6-ஆம் தேதி பயணத்துக்கு திங்கள்கிழமை (செப்.7) முன்பதிவு செய்துகொள்ளலாம். நவ.7-ஆம் தேதி பயணத்துக்கு செவ்வாய்க்கிழமை (செப்.8) முன்பதிவு செய்யலாம். தீபாவளி பண்டிகை முடிந்து ஊா் திரும்புவோா் செப்.10 முதல் பயணச்சீட்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.