உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை உயர்த்துவோம் என்று சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.1693 ஆம் ஆண்டு ஆக. 22 ஆம் தேதி மெட்ராஸ் உருவாகியதாகக் கூறப்படும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக. 22 ஆம் தேதி சென்னை நாளாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை நாளையொட்டி முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்! வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியும், உழைப்பும், புதுமையும் சங்கமிக்கும் நகரமாக சென்னை விளங்குவதோடு, பல்வேறு மொழி, இன, பண்பாடுகளைச் சேர்ந்த மக்களை அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் மாநகரமாகவும் திகழ்கிறது. சென்னையின் வரலாற்றுப் பெருமையையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாத்து, நவீன உட்கட்டமைப்புகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த சீர்மிகு பெருநகராக சென்னையை மேலும் உயர்த்துவோம். அனைவருக்கும் சமவாய்ப்பும், பாதுகாப்பான சூழலும், வளமான வாழ்வும் கிடைத்திட உறுதியேற்போம். வளரட்டும் சென்னைப் பெருநகரம்! உயரட்டும் மக்களின் வாழ்க்கைத்தரம்!" என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.வரலாற்றின் தடங்களைச் சுமந்தும், நவீனத்தின் வேகத்தோடு பயணித்து, தமிழகத்தின் வெற்றித் தலைநகராகத் திகழும் நம் சென்னையின் பெருமையைப் போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய “சென்னை நாள்” நல்வாழ்த்துகள்!வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், கல்வி, மருத்துவம்,… pic.twitter.com/8CNCLndNO9— CMOTamilNadu (@CMOTamilnadu) August 22, 2026Chief Minister Vijay extends his best wishes for chennai day கம்யூனிஸ்டுகள் ஆதரவில்தான் தவெக அரசு நீடிக்கிறது! நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா?- பெ. சண்முகம்