அவைக் குறிப்பில் நீக்கியவற்றை ரீல்ஸ் வெளியிட்டால் நடவடிக்கை: ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை

Wait 5 sec.

தமிழக சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கிய கருத்துகளை எந்த வடிவில் வெளியிட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் கருத்துகள் குறித்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரன் பேசியதாவது, "அவைக் குறிப்பில் இருந்து நீக்கியவற்றை எந்த வகையில் பயன்படுத்தினாலும், அது அவையின் மாண்பைக் குறைப்பதாகவும், நடத்தை விதிகளை மீறுவதாகவும் இருக்கும்.இது தொடர்பாக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கடிதம் வழங்கியுள்ளனர். அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், ஆக. 17 முதல் தொடங்கி, செப்டம்பர் முதல் வாரம் வரையில் நடைபெற்று வருகிறது. மேலும், சட்டப்பேரவையின் அலுவல்கள் நேரலையிலும் ஒளிபரப்பப்படுகிறது.சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரும் ஆளுங்கட்சியினரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையோ அவையின் மாண்பைக் குறைக்கும் கருத்துகளையோ கூறினால், அவற்றை உடனடியாக அவைக் குறிப்பிலிருந்து பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நீக்கி விடுகிறார்.இருப்பினும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோ நீக்கப்பட வேண்டிய கருத்துகளோ அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டாலும், அவை நேரலையில் வெளியாகி, சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும், இதன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சட்டப்பேரவையில் உதயநிதி வலியுறுத்தினார்.சட்டப்பேரவை நேரலையை எதிர்க்கவில்லை, ஆனால்.... உதயநிதி கோரிக்கையும் ஜேசிடி பிரபாகர் பதிலும்Action will be taken if expunged assembly proceedings are released as Reels, says Speaker JCD Prabhakar