லஞ்சம், ஊழலைத் தடுக்கவே எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுகிறது: அமைச்சர்

Wait 5 sec.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படுவது லஞ்சம், ஊழலைத் தடுப்பதற்காகவே என அமைச்சர் விஜய் பாலாஜி கூறியுள்ளார்.எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்துப் பேசியதாவது, "எம்எல்ஏ-க்களுக்கு கார் வழங்கப்படுவது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். ஒரு எம்எல்ஏ மக்களைப் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான போக்குவரத்துச் செலவுகள் உள்ளிட்டவையும் உள்ளன. இதனாலேயே அவர்கள் தவறான வழிக்குச் சென்றுவிடக் கூடாது. லஞ்சம், ஊழல் எதனால் வருகிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.இந்தத் திட்டத்தை முதல்வராகவே அறிவிக்கவில்லை. ஒரு எம்எல்ஏ முன்வைத்த கோரிக்கையால்தான், அவர்களின் நலன் கருதி, இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது.மேலும், அடிப்படை வசதி இல்லாத எம்எல்ஏ விண்ணப்பித்தால் மட்டுமே வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.வருங்கால பிரதமர் விஜய்: அமைச்சர் ஜெகதீஸ்வரிCars are provided to MLAs specifically to prevent bribery and corruption, says Minister Vijay Balaji