எந்தன் கண்ணம்மா... ஒன்ஸ் மோர் டிரைலர்!

Wait 5 sec.

நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்த ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இப்படத்தில், நடிகை அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.காதல் திரைப்படமாக எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்கள் தள்ளிச்சென்றது. காரணம், சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.மில்லியன் டாலர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இருந்த திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்தது. முக்கியமாக, இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைப்பில் வெளியான, வா கண்ணம்மா பாடல் ரசிகர்களிடம் ஹிட் அடித்தது.ஒன்ஸ் மோர் திரைப்படத்தை வருகிற ஆக. 28 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். The trailer for the movie Once More, starring Arjun Das and Aditi Shankar, has been released.