நடிகர் சிரஞ்சீவியின் 158-வது திரைப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான சிரஞ்சீவி தன் புதிய படத்தில் நடிக்கிறார். அவரது 158-வது படமாக உருவாகும் இதனை இயக்குநர் பாபி கொல்லி இயக்க, கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.இதில், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். இறால் பண்ணையில் பணியாற்றும் சிரஞ்சீவி அங்குள்ள தொட்டிகளில் துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படம் அடுத்தாண்டு ஜன. 13 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. A glimpse video of actor Chiranjeevi's 158th film has been released.