நடிகர் துல்கர் சல்மானின் ஐஆம் கேம் திரைப்படத்தின் வெளியீட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது. நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த புதிய திரைப்படம் ஐஆம் கேம். இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர்.சூதாட்டத்தை மையப்படுத்திய திரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் அதன் எடிட்டிங் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.ஓணம் வெளியீட்டை முன்னிட்டு, இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தை உலகளவில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் இதனை செப். 3 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், வெளியீட்டு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். கண்கலங்கிய ராம் கோபால் வர்மா... சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்த இயக்குநர் சிவா நிர்வாணா! The release poster for actor Dulquer Salmaan's film 'Im Game' has been released.