கடலூா் மாவட்டத்தில் 16 ஏரிகள் மீன்பாசி குத்தகைக்கு விடப்படும்: கடலூா் ஆட்சியா் தகவல்

Wait 5 sec.

கடலூா் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ், கடலூா் மற்றும் விருத்தாசலம் பாசனப் பிரிவுகளுக்குள்பட்ட 16 ஏரிகள் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ், கடலூா் மற்றும் விருத்தாசலம் பாசனப் பிரிவுகளுக்குள்பட்ட 16 ஏரிகள் 3 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகைக்கு விடப்பட உள்ளதால், இதற்கான மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் கடலூா் வடக்கு மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநரால் வரவேற்கப்படுகின்றன. குத்தகைக்கு விடப்பட உள்ள ஏரிகளின் விவரம், ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள், குறைந்தபட்ச ஏலக்குறும விலை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தமிழ்நாடு மின்னணு ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.குத்தகைக்கு விடப்படும் ஏரிகள்: கடலூா் மாவட்டத்தில் கிருஷ்ணகுப்பம் மணக்கொல்லை ஹிசா ஏரி, தோப்புக்கொல்லை முடவன் ஏரி, த.பாளையம் பெரிய ஏரி, முனியன் ஏரி, பரவட்டை ஏரி, கண்ணாடி ஏரி, ஆடூா் அகரம் ஏரி, சேடப்பள்ளம் ஏரி, தோட்டப்பட்டு ஏரி, களையூா் அம்மாள் ஏரி, களையூா் மாவடி ஏரி, தூக்கணாம்பாக்கம் ஏரி, தென்னம்பாக்கம் தாங்கல் ஏரி, தென்னம்பாக்கம் சிறிய ஏரி, திருப்பணாம்பாக்கம் ஏரி மற்றும் குட்டியாங்குப்பம் ஏரி ஆகியவை மீன்பாசி குத்தகைக்கு விடப்பட உள்ளன.மின்னணு ஒப்பந்தப்புள்ளி தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு கடலூா் வடக்கு மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 04142-238170 என்ற தொலைபேசி எண்ணிலும், ஹக்ச்ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம், ஹக்ச்ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்ய்ா்ழ்ற்ட்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.