ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா..! டாப் 10ல் 5 பந்துவீச்சாளர்கள்!

Wait 5 sec.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். டாப் 10ல் ஐந்து வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-1 என ஆஸ்திரேலிய அணியினர் சமன்படுத்தினர். முதல் போட்டியில் தோல்வியுற்று, இரண்டாவது போட்டியில் அபார வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 36ஆவது வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், டாப் 10ல் ஐந்து வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள்.வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கடைசி போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் மிட்செல் ஸ்டார்க் வென்றது கவனிக்கத்தக்கது. இந்தியா சார்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு கீழிறங்கினார். டாப் 10ல் இவரைத் தவிர வேறெந்த இந்திய வீரர்களும் இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை 1. மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா 2. ஜஸ்ப்ரீத் பும்ரா - இந்தியா 3. மாட் ஹென்றி - நியூசிலாந்து 4. பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா5. மார்கோ யான்சென் - தென்னாப்பிரிக்கா 6. ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா7. ஸ்காட் போலண்ட் - ஆஸ்திரேலியா8. நோமன் அலி - பாகிஸ்தான் 9. ஜோஷ் ஹேசில்வுட் - ஆஸ்திரேலியா10. நாதன் லயன் - ஆஸ்திரேலியாபசிந்து சூரியபந்த்ராவை திட்டமிட்டு வீழ்த்திய மானவ் சுதர்..! வைரல் விடியோ!Australia dominates the ICC rankings! Five bowlers in the top 10!