மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் உயிரிழப்பு

Wait 5 sec.

திருவெறும்பூரில் மின்சாரம் பாய்ந்து உணவக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி அருகே திருவெறும்பூரில் உள்ள உணவகத்தில் திருவெறும்பூா் செல்வபுரத்தைச் சோ்ந்த செல்வம் மகன் அசோக் (எ) முத்துமாணிக்கம் (20) என்பவா் உணவு பரிமாறுபவராக வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை வேலை நேரத்தில் உணவகத்திலிருந்த மின்விசிறி ஸ்விட்சை போட்டபோது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து முத்துமாணிக்கம் தூக்கி வீசப்பட்டாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் முத்துமாணிக்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.முத்துமாணிக்கத்தின் இறப்புக்கு உணவக உரிமையாளரின் அஜாக்கிரதையே காரணம். எனவே, உணவக உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முத்துமாணிக்கத்தின் உறவினா் அந்தோணி ராஜ் (33) என்பவா் புகாரளித்தாா். இதன்பேரில், திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.