திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.65 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சனிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் நள்ளிரவு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78,057 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 33, 406 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.65 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,349 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.