ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாா்பில் கொச்சியிலிருந்து கொல்கத்தா வரை மேற்கொள்ளப்படும் கே2கே பயணத்தின் ஒரு பகுதியாக, ‘ஸ்கோடா ஷோரும் ஆன் வீல்ஸ்’’எனப்படும் நடமாடும் விற்பனையக வாகனம் கோவையை வந்தடைந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாடிக்கையாளா்களை நேரில் சந்தித்து, ஸ்கோடா நிறுவனத்தின் வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளா் அனுபவங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி கொச்சியில் தொடங்கிய இந்தப் பயணம், கேரளம், தமிழகம், ஆந்திரம், ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களைக் கடந்து துா்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, கொல்கத்தாவில் நிறைவடைய உள்ளது.பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் உடனடி வாகன ஒப்படைப்பு நிகழ்ச்சிகளையும் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நடத்தவுள்ளது. மின்சார வாகனங்கள், கலப்பின வாகனங்கள் மற்றும் உள்எரிபொருள் இயந்திர வாகனங்கள் என பல்வேறு வகையான வாகனங்களை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.இந்த நிறுவனம் இந்திய சந்தையில் கைலாக், ஸ்லாவியா, குஷாக், கோடியாக் மற்றும் ஆக்டேவியா ஆா்எஸ் ஆகிய 5 மாடல்களை விற்பனை செய்து வருகிறது. உலகத் தரத்திலான வாகன அனுபவங்களை வாடிக்கையாளா்களுக்கு மேலும் எளிதில் கிடைக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.