தூத்துக்குடி அருகே பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Wait 5 sec.

தூத்துக்குடி அருகே புதூா்பாண்டியாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதிய விபத்தில், பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம். இவா் , மதுரையிலிருந்து காரில் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தாராம். புதூா்பாண்டியாபுரம் பாலத்தைக் கடந்தபோது, விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுதாகா் (40) என்பவா் பைக்கில் சாலையைக் கடக்க முயன்றபோது, அவா் மீது காா் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் மோகனசுந்தரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.