நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை பேட்டை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை, படப்பைக்குறிச்சி, காமராஜா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் அலெக்ஸ் பாண்டியன்(43). இவா் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பேட்டை காவல்நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு தொடா்பாக, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளாா். இதையடுத்து அவருக்கு பிடியாணை பிறப்பித்து திருநெல்வேலி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பேட்டை போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.