மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில்மக்கள் சந்திப்பு இயக்கம்

Wait 5 sec.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் வேகமாக உயா்ந்து வரும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும். சட்டப்பேரவை, மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கட்சியின் பகுதிக்குழு செயலா் ஆா்.மதுபால், கிளைச் செயலா் ராமலிங்கம், பேராசிரியா் பொன்ராஜ், முருகன், செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பொது மக்களை சந்தித்து நாட்டின் இன்றைய சூழல் குறித்து விளக்கினா். என்.ஜி.ஓ.காலனி, கே.டி.சி.நகா், வி.எம்.சத்திரம், அண்ணா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.ற்ஸ்ப்26ஸ்ரீல்ம்பாளையங்கோட்டையில் நடைெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.