தமிழகத்திலிருந்து கைலாய யாத்திரை சென்று, நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதியே தங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில், சீன நாள்காட்டியால் தேதி மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கும்பகோணத்தைச் சேர்ந்த சுற்றுலா ஏஜென்ஸி நிறுவனர் இது குறித்து கூறியிருக்கும் தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.அதன்படி, நேபாளத்தில் கைலாய யாத்திரை மேற்கொள்ள ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகத்திலிருந்து வருவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம்.ஆனால், நேபாள அதிகாரிகளோ, எங்களுக்கு அந்த தேதியில் அனுமதி மறுத்துவிட்டதால்தான் ஆகஸ்ட் 23ம் தேதி செல்ல மீண்டும் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டது. சீன நாள்காட்டியின்படி, ஆகஸ்ட் 1-20ஆம் தேதி வரை குதிரை ஆண்டு என்பதால், ஜெயின் மத பக்தர்கள் மட்டுமே நேபாள கோயில்களில் வழிபாடு நடத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறி தங்களது விண்ணப்பங்களை திருப்பி அனுப்பி, ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குப் பிறகு வருமாறு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனால்தான், ஆகஸ்ட் 1ஆம் தேதி செல்லவிருந்த எங்கள் பயணம் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த தேதி மாற்றத்தால், எங்களுடன் நேபாளம் வர வேண்டிய சில பக்தர்களுக்கு வர முடியாமல், அவர்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சில பயணிகளின் பாஸ்போர்ட்கூட என்னிடம்தான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.