சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 27) சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 160 குறைந்தது. நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி இருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. தங்கம் விலைஇந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆக. 27, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,19,520-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,940-க்கும் விற்பனையாகிறது.தங்கம் விலை சற்று குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளி விலைவெள்ளி விலையில் 3-வது நாளாக இன்று மாற்றமில்லை. கிராம் ரூ. 265-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Chennai gold and silver rate today (aug 27)