சீனாவில் அடுத்தடுத்த நான்கு புயல்கள்!

Wait 5 sec.

சீனாவின் கடலோர மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து 4 புயல்கள் உருவாகி வருவதால், அங்கு தொடா் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் தெற்குத் தீவான ஹைனான் மாகாணத்தில், ‘நர்ரா’ புயல் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கரையைக் கடந்தது. கடந்த சில நாள்களாக பெய்பு வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த இப்புயலால் குவாங்ஸி, ஹைனான் மற்றும் குவாங்டாங் பகுதிகளில் அதிதீவிர மழை கொட்டித் தீா்த்தது. தொடா் மழையால் குவாங்ஸி பகுதியில் உள்ள ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பாய்வதுடன், தாழ்வான பகுதிகளில் நீா் சூழ்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, சௌடல் புயலானது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடையே சீனாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள செஜியாங் மற்றும் ஃபுஜியான் மாகாணங்களுக்கு இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இப்புயல்களுடன் இணைந்து, கெனாரி மற்றும் அட்சானி என மொத்தம் 4 புயல்கள் வடமேற்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் மையம் கொண்டிருப்பதாக சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இத்தொடா் புயல்களின் அச்சுறுத்தல் காரணமாக குவாங்ஸி மற்றும் ஹைனான் மாகாணங்களில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.